சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் ராஜமௌலி..!! இது பான் இந்தியா அல்ல..!! பான் வேர்ல்ட் படம்..!!
ஜப்பானில் நடைபெற்ற விழாவில் இயக்குநர் ராஜமெளலி கலந்து கொண்டு பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுவரை தனது அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்திருப்பதாகவும் அந்த படத்தில் ஹீரோவாக நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக ராஜமெளலி தெரிவித்துள்ளார். மேலும், அந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ முடித்து விட்டு விரைவில் மகேஷ் பாபுவுடன் மீண்டும் ஜப்பான் வருகிறேன் என ராஜமெளலி பேசியிருக்கிறார். இயக்குநர் ராஜமெளலியின் பேச்சை அதிகம் ஷேர் செய்யும் ரசிகர்கள் பாகுபலியை, ஆர்ஆர்ஆர் படங்களை விட இந்த படம் மிரட்டலாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட மகேஷ் பாபுவின் ஸ்டில் ஒன்றை டிரெண்டாக்கி வருகின்றனர்.
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆகவே மகேஷ் பாபு மாஸ் காட்டி வருகிறார். தனது படங்களில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு என்கிற டைட்டிலை பயன்படுத்தி வருகிறார். 80 முதல் 100 கோடி வரை ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கி வருவதாகவும் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் சம்பளங்கள் இவரது சம்பளத்தை விட குறைவு என்றே கூறுகின்றனர். ஆந்திரா, தெலங்கானாவில் இவரது படங்கள் நல்லா இல்லை என்றாலும் வசூல் வேட்டை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் பிற மொழிப் படங்களை ரீமேக் செய்து நடித்துள்ளனர். ஆனால், எந்தவொரு ரீமேக் படத்தையும் பண்ண மாட்டேன் என்கிற கொள்கையுடன் மகேஷ் பாபு மாஸ் காட்டி வருகிறார். இவர் நடித்த ஒக்கடு படத்தைத் தான் கில்லி என விஜய் ரீமேக் செய்து நடித்தார். போக்கிரி படமும் இவர் நடித்த தெலுங்கு போக்கிரி படம் தான். மகேஷ் பாபு நடிப்பில் இந்த ஆண்டு வெளியான குண்டூர் காரம் திரைப்படமும் சொதப்பி விட்டது. ஆனால், 250 கோடி வசூல் ஈட்டியது. அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள திரைப்படம் பான் இந்தியா படமாக அல்லாமல் பான் வேர்ல்ட் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக இந்தோனேசியாவில் இருந்து எல்லாம் ஹீரோயினை ராஜமெளலி தேர்வு செய்து வருவதாக கூறுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி படங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஹீரோக்களின் பிசிக் நல்லாவே இருக்க வேண்டும். பாகுபலி படத்திற்காக பிரபாஸ் கச்சிதமாக உடம்பை ஏற்றி அசத்தினார். ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் போட்டிப் போட்டு சிக்ஸ் பேக் வைத்தனர். மகேஷ் பாபுவும் கடந்த 6 மாத காலமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில், ராஜமெளலி படத்தில் அவரது தோற்றம் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் எடிட் செய்த ஏஐ போட்டோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.
இந்த பொங்கலுக்கு வெளியான ஹனுமான் திரைப்படம் 300 கோடி வசூலை ஈட்டியது. ஆப்பிரிக்கா காடுகளில் ஹனுமான் கனெக்ஷன் உடன் மகேஷ் பாபு படத்தை 1000 கோடி பட்ஜெட்டில் ராஜமெளலி எடுக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் அபாயம்..!! இன்றே கடைசி நாள்..!! வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை..!