பயங்கரம்...! 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்...!
இன்று 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்யும்கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 10 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்றைய வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16-ம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.