முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முக்கிய எச்சரிக்கை...! தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது...!

06:05 AM Dec 20, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது செய்தி குறிப்பில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023 காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, இதர அணைகளில் நீர்வரத்து அதிகமாகி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளது. அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், தாமிரபரணி மற்றும் இதர ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், அதே வேளையில் ஆறு மற்றும் குளங்களில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டத்தில் அதிகப்படியான குளங்கள் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆறு மற்றும் குளத்தின் கரைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இவ்விடங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது. மேலும் தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
rainrain alertRain notificationSouthern dt
Advertisement
Next Article