முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஷார்...! அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த 10 மாவட்டத்தில் மழை...! வானிலை மையம் எச்சரிக்கை

Rain in these 10 districts in the next three hours
07:31 AM Dec 26, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக சற்று வலுவிழக்கக்கூடும்.

இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர்,சென்னை, விழுப்புரம் காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28, 29 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 30, 31 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
ChennaiMetrology Departmentrain alertசென்னைதமிழ்நாடு
Advertisement
Next Article