'மேரேஜ் பண்ணிக்கலாம்..' விவாகரத்தான பெண்களை குறிவைத்து மோசடி..!! மேட்ரிமோனியல் வெப்சைட்களின் பகீர் காரியம்
இந்தியாவில் மேட்ரிமோனி தளத்தில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், ஒடிசாவில் இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. நடுத்தர வயது பெண்களை குறிவைத்து மோசடி செய்த நபர போலீசார் கைது செய்தனர். ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள சென்டிபாகாவைச் சேர்ந்த பிரஞ்சி நாராயண் நாத் என்ற நபர், மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலம் பெண்களைக் குறிவைத்து மோசடி செய்துள்ளான்.
ரயில்வே ஊழியர், வருமான வரித்துறை அதிகாரி, சுங்கத்துறை அதிகாரி என பல்வேறு சுயவிவரங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி வருகிறார். திருமணமாகாத, விவாகரத்து செய்யப்பட்ட அல்லது விதவையான நடுத்தர வயதுப் பெண்களை அவர் குறிவைத்து இந்த மோசடி நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேட்ரீமோனியல் ப்ரொபைல் மூலம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களிடன் தொலைபேசி மூலம் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களின் வீட்டிற்கே சென்றுள்ளார். பல பெண்களை மேட்ரிமோனியல் மூலம் தொடர்பு கொண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு பலருக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவர்கள் வீட்டிலே தங்கினார். அவர் அவர்களை தனது சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதில்லை. அதன் பிறகு அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அவர் மீது ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கட்டாக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒடிசா சிஐடி-கிரைம் பிரிவின் சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 2022ஆம் ஆண்டு சாலை விபத்தில் கணவரை இழந்தார். இரண்டு மகள்கள் உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் சந்தித்தனர். சுமார் ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் 32 கிராம் தங்கம் திருடப்பட்டது. இறுதியில் அவனுடைய மற்ற உறவுகளையும் அவள் கண்டுபிடித்தாள். அதன் பிறகு அவள் புகார் கொடுத்தாள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.