For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உயிருக்கு உயிராய் காதலித்த ராகுல்..!! குறுக்கே வந்த குடும்ப கௌரவம்..!! திருமணம் செய்யாததற்கு காரணமே இதுதான்..!!

Rahul Gandhi's party members were adamant that marrying a foreign woman would not bring negative criticism to the family again.
10:25 AM Jun 07, 2024 IST | Chella
உயிருக்கு உயிராய் காதலித்த ராகுல்     குறுக்கே வந்த குடும்ப கௌரவம்     திருமணம் செய்யாததற்கு காரணமே இதுதான்
Advertisement

ராகுல் காந்தி என்ற ஒரு பெயர் இப்போது இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்த மோடி, இம்முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். மோடி இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதற்கு காரணமே ராகுல் காந்தி தான். எம்பி தேர்தலில் நின்ற வயநாடு மற்றும் ரேபரலி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெற்றிருக்கிறார். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வரிசையில் ராகுலும் நிற்கிறார். ராகுலின் அரசியல் வாழ்க்கை தற்போதைய ஏறுமுகமாக இருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் சொல்லப்படாத சோகக் கதை ஒன்றும் இருக்கிறது.

Advertisement

அவருடைய தங்கை பிரியங்கா திருமணம் செய்து குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், 40 வயதை கடந்தும் ராகுல் காந்தி மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கு அவருடைய காதல் தோல்வியும், காதலியை மறக்க முடியாத சோகமும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. 1998இல் ராகுல் காந்தி ஸ்பெயின் சேர்ந்த வெரோனிகா என்னும் பெண்ணை காதலிப்பதாக சொல்லப்பட்டது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இருவரும் கேரளாவில் தங்கியிருந்து அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்த்தது எல்லாம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால், பின்னர் வெரோனிகா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தற்போது இதற்கு பின்னணியாக அரசியலை சொல்கிறார்கள். அதாவது இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசியலின் எதிர்காலமாக இருந்தார். அப்போது அவர் இத்தாலியை சேர்ந்த சோனியா காந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் இந்திய முறைப்படி திருமணம் நடந்திருந்தாலும், சோனியா காந்தி இந்திய பெண்ணாகவே மாறி இருந்தாலும் தாலி நாட்டுக்காரரை திருமணம் செய்தவர் என்ற பெயர் ராஜீவ் காந்தியின் மீது இருந்து அழியவே இல்லை.

ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு அயல் நாட்டவர் எங்களை ஆளக்கூடாது என்று சோனியாவை அரசியலில் இருந்து துரத்துவதற்கு பல திட்டங்களை எதிர்க்கட்சிக்கட்சிகள் போட்டுள்ளனர். சோனியா நினைத்திருந்தால் தன் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இத்தாலிக்கே சென்றிருக்கலாம். ஆனால், திருமணம் செய்து வந்த அரசியல் குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே இன்று வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு வந்து மீண்டும் அந்த குடும்பத்தின் மீது நெகட்டிவ் விமர்சனத்தை கொண்டு வந்து விடக்கூடாது என்பதில் அவருடைய கட்சிக்காரர்களை உறுதியாக இருந்தார்கள். சோனியாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை. குடும்பத் தன்மானம் மற்றும் அரசியலுக்காக தன் காதலை தியாகம் செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

Read More : பங்குச்சந்தை முதலீட்டில் ரூ.30 லட்சம் கோடியை இழக்க பிரதமர், அமித்ஷாவே காரணம்..!! குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி..!!

Tags :
Advertisement