முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"ஆதரவாளருக்கு நாய் பிஸ்கட் போட்ட ராகுல் காந்தி."? அசாம் முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு .!

12:07 PM Feb 06, 2024 IST | 1newsnationuser4
Advertisement

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ஆதரவாளருக்கு வளர்ப்பு பிராணி சாப்பிட மறுத்த பிஸ்கட்டை கொடுத்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்த அவர் ராகுல் காந்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

Advertisement

முன்னதாக ராகுல் காந்தி பாரத் ஜோதா யாத்திரையின் போது ஜார்க்கண்ட் நகரில் பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு தனது ஆதரவாளர்களை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த ராகுல் காந்தி தனது வளர்ப்பு பிராணிக்கு பிஸ்கட் கொடுத்தார். அவரது வளர்ப்பு பிராணி நாய் அந்த பிஸ்கட்டை சாப்பிட மறுத்தது. இது தொடர்பான வீடியோவை பாரத் ஜோதா யாத்திரையின் அதிகாரப்பூர்வ 'X' வலைதளத்தில் பதிவு செய்திருந்தது.

இதுகுறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. ராகுல் காந்தி தனது நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை தன்னை சந்திக்க வந்த ஆதரவாளருக்கு கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் இது போன்ற நடவடிக்கைகளால் தான் அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில முதல்வர் பதிவு செய்திருக்கும் வீடியோவில் ராகுல் காந்தியின் வளர்ப்பு நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை தனது ஆதரவாளருக்கு ராகுல் காந்தி கொடுப்பது போன்ற வீடியோ இடம் பெற்று இருக்கிறது. இது குறித்து ராகுல் காந்தியை குற்றம் சாட்டியிருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா இது போல் முன்பு நடந்த ஒரு சம்பவத்தையும் பதிவு செய்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அவரது வளர்ப்பு நாய்க்கு கொடுக்கப்படும் பிஸ்கட்டை காங்கிரஸ் தலைவர்களுக்கு பரிமாறியதாகவும் தனது குற்றச்சாட்டில் பதிவு செய்து இருக்கிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

இந்தக் குற்றச்சாட்டு தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த குற்றச்சாட்டு பிஜேபிக்கு காங்கிரசுக்கு எதிரான ஒரு புதிய ஆயுதமாகவும் அமைந்திருக்கிறது கடந்த சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tags :
assam chief ministerBJPCONGRESSragul gandhi
Advertisement
Next Article