அரசமைப்புப் புத்தகத்தை கையிலேந்தி MP-ஆக பதவியேற்ற ராகுல் காந்தி!! ஆரம்பமே அமர்களப்படுத்திய தமிழக MPக்கள்...!
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவியேற்பு விழா ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டத் தொடர் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேயேற்றுக் கொண்டார். கையில் அரசியலமைப்பு புத்தகத்துடன் வந்த ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினருக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொண்டார். தொடர்ந்து காங்கிரஸ் தமிழக எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் தயாநிதி மாறன், துரை வைகோ, கனிமொழி, ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
லோக்சபா சபாநாயகர் தேர்தல்
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லாவும், காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் நேருக்கு நேர் மோத உள்ளனர். துணை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்திய அணிகள் ஒருமித்த கருத்துக்கு வராததை அடுத்து மக்களவையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் அலுவலகம் செல்லும் மாநாடு நடந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் பிந்தைய பதவியை கோரின. ராஜ்நாத் சிங்குடன் எதிர்க்கட்சிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவடையாததால், லோக்சபா சபாநாயகர் தேர்தல் அவசியமானது.
Read more ; ஆபத்து!! ‘குழந்தைகளை பாதிக்கும் கொழுப்பு கல்லீரல்’ காரணம் என்ன தெரியுமா? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!