For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Election 2024 | "பாகுபலி ராகுல் காந்தி; மோடி காலி"… திருப்பூர் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி.!

08:49 PM Apr 13, 2024 IST | Mohisha
election 2024    பாகுபலி ராகுல் காந்தி  மோடி காலி … திருப்பூர் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி
Advertisement

ELECTION: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி நேற்று தமிழகத்திற்கு வருகை புரிந்தார் . அவர் கோவை மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியின் தமிழக வருகை மோடியின் தூக்கத்தை கெடுத்து விட்டது என கூறி இருக்கிறார். தொடர்பாக திருப்பூர் பிரச்சாரத்தில் பேசிய ஒருவர் ஸ்டாலின் ராகுல் காந்தியின் தமிழக வருகை மோடியின் மொத்த பிரச்சாரத்தையும் காலி செய்து விட்டது என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பங்கேற்ற கோவை பிரச்சார பொதுக்கூட்டம் பாகுபலி போல பிரம்மாண்டமாக இருந்தது என தெரிவித்த மு.க ஸ்டாலின் சமூக நீதி மற்றும் ஜனநாயகம் செழித்து வளர இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் எனவும் பொதுமக்களை அவர் எச்சரித்தார். முதல்வர் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

Read More: MSC ARIES: உச்சகட்ட பதற்றம்.!! 17 இந்தியர்களுடன் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பல்.!! ஈரானுடன் மத்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை.!!

Tags :
Advertisement