Modi: கிண்டலடித்து பேசிய ராகுல் காந்தி!… தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
Modi: பிரதமர் மோடி குறித்து பொதுவில் பேசும்போது, கவனமாக பேசுமாறு ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த தேர்தல் பிரச்சாரங்களின்போது பிரதமர் மோடி குறித்து கடுமையாக தாக்கி ராகுல் காந்தி பேசியதை அடுத்து, அதற்கு எதிராக அப்போது நோட்டீஸ் வழங்கிய தேர்தல் ஆணையம், அவ்வாறு மீண்டும் பேசக்கூடாது என தற்போது வலியுறுத்தி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை துரதிருஷ்டக்காரர் என்றும் பிக்பாக்கெட் என்றும் பழித்தும், கிண்டலடித்தும் பேசியிருந்தார். பொதுவெளியில் அது தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
தனது நண்பரும் தொழிலபதிபருமான அதானியுடன் இணைந்து மோடி பிக்பாக்கெட் அடிப்பவர்களைப் போன்று நடந்துகொள்வதாக ராகுல் காந்தி சாடி இருந்தார். மக்களின் பாக்கெட்டுகளை அதானி துழாவும்போது, பிரதமர் மோடி மக்கள் கவனத்தை திசை திருப்புவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, இவை பிக்பாக்கெட் அடிப்பவர்களின் நடவடிக்கையை ஒத்திருப்பதாக கூறினார். அதே போன்று ’பனௌட்டி’ என்றும் மோடியை ராகுல் பழித்திருந்தார். அதிர்ஷ்டம் இல்லாதவர், துரதிருஷ்டக்காரர் என்று பனௌட்டிக்கு பொருள் கூறலாம்.
பிரதமர் மோடி பங்கேற்றால் அந்த காரியம் ஜெயிக்காது என்பதான பழிச்சொற்களை பிரதிபலிக்கும் வகையில் பனௌட்டி இருந்தது. இது தரமற்றது, ரசனைக் குறைவானது என அப்போதே தேர்தல் ஆணையம் கண்டித்து இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பிரச்சாரத்தின் போது நட்சத்திர பிரச்சாரகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கான அண்மை ஆலோசனையை சரியானபடி பின்பற்றுமாறும், தேர்தல் ஆணையம் ராகுலுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகளை மீறினால், கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பிரச்சாரகர்கள் மீது வழக்கமான 'தார்மீக கண்டனத்திற்கு' மாறாக இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதே போன்று கடந்த காலங்களில் நோட்டீஸ் பெற்ற நட்சத்திர பிரச்சாரகர்கள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறினால் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
Readmore:வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இனி இந்த 2 வங்கிகளும் ஒன்றுதான்..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!