For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காங்கிரஸில் இருந்து விலகுகிறார் ராகுல் காந்தி?… வைரலாகும் வீடியோ!… அரசியல் களத்தில் பரபரப்பு!

07:55 AM Apr 15, 2024 IST | Kokila
காங்கிரஸில் இருந்து விலகுகிறார் ராகுல் காந்தி … வைரலாகும் வீடியோ … அரசியல் களத்தில் பரபரப்பு
Advertisement

Rahul gandhi: ராகுல் காந்தி கட்சியில் இருந்து விலகுவதாகவும் தனது தாத்தா ஊருக்கு செல்வதாகவும் அவரே பேசி இருக்கும் விதமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் வெளியாகிறது. அந்த வகையில், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது ஜூன் 4 தேதி தெரியவரும். இந்தியாவில் இந்தியா, என்டிஏ என இரு கூட்டணிகள் மட்டுமல்லாது அந்தந்த மாநிலங்களில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியாகவும் களமிறங்கி இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் 20 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். இந்நிலையில் ராகுல் காந்தி கட்சியில் இருந்து விலகுவதாகவும் தனது தாத்தா ஊருக்கு செல்வதாகவும் அவரே பேசி இருக்கும் விதமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், "ராகுல் காந்தி ஆகிய நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். தேர்தலுக்காக மட்டுமே இந்துவாக இருப்பது எனக்கு கடினமாக இருக்கிறது.. தேர்தலுக்காக யாத்திரியை நடத்தினோம். நியாயன் பத்ரா என்கிற தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளோம்.

மோடி, ஊழல்வாதிகளை தொடர்ந்து சிறைக்கு அனுப்பி வருகிறார்.. அவரது தலைமையில் ஊழல்வாதிகள் அனைவருமே சிறைக்கு செல்கிறார்கள். அதனால் இத்தாலியில் இருக்கும் என்னுடைய தாத்தா வீட்டிற்கு நான் செல்கிறேன்" இப்படி ராகுல் காந்தி பேசியதான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‌பின்னர் இந்த வீடியோ வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்தபோது எடுத்த வீடியோ என்பது தெரிய வந்தது. மேலும், பல செய்தி ஊடகங்கள் வேட்புமனு தாக்கல் வீடியோக்களை பதிவிட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலின் போது அவர் பேசியதாவது, "ராகுல் காந்தி ஆகிய நான் மனதார உண்மையாக உளப்பூர்வமாக இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக எந்த ஒரு விஷயத்தையும் செய்யமாட்டேன்.. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஆகியவற்றை காப்பேன் என உறுதி கூறுகிறேன்" என பேசி இருப்பார்.

ஆனால், இது எடிட் செய்யப்பட்டு செயற்கை நுண்ணறிவு மூலமாக இப்படியாக திரிக்கபட்டுள்ளது. அது மட்டுமல்லாது இந்த ஆய்வினை மேற்கொண்ட Boom இணையதளம் Itisaar தொழில்நுட்பத்தின் மூலமாகவும் இந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்திருக்கிறது.

Readmore: ‘Boat’ நிறுவன யூசரா நீங்கள்..? உங்கள் ரகசிய தகவல்கள் லீக்..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

Advertisement