For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Rahul Gandhi | 'வேலையில்லாத இளைஞர்களுக்கு நிவாரணம்’..!! இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!! ராகுல் காந்தி அதிரடி..!!

09:53 AM Mar 06, 2024 IST | 1newsnationuser6
rahul gandhi    வேலையில்லாத இளைஞர்களுக்கு நிவாரணம்’     இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு     ராகுல் காந்தி அதிரடி
Advertisement

வேலையில்லாதோருக்கு நிவாரணம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துக்கள் கேட்டறிந்து அறிக்கையை தயாரித்து வருகிறது.

இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது, அக்னிபாத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது போன்ற பல பெரிய அறிவிப்புகள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஒரு பெரிய அறிவிப்பை X தளத்தில் பதிவிட்டு அறிவித்துள்ளார்.

அதில், 'இப்போது பட்டங்கள் மதிக்கப்படும், பிரச்சனைகள் தீர்க்கப்படும், அனைவருக்கும் வேலை கிடைக்கும். இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருக்கிறது. இதன் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும். இன்று (மார்ச் - 06) ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்படும். வேலையின்மை, கல்வி, அக்னிவீர் யோஜனா போன்ற இளைஞர்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்' என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது. அந்த அறிக்கையில் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது பற்றியும், சிலிண்டர் மானியம் பற்றியும், சாதிவாரி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவது பற்றியும் வாக்குறுதி அளிக்கப்படும். இவை தவிர அரசு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : TNPSC | குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement