For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஸ்டாலின் ஸ்டைலில் ராகுல் காந்தி!… திமுக அரசின் திட்டம் தெலுங்கானாவில் வாக்குறுதியாக!… என்னென்ன தெரியுமா?

06:02 PM Nov 03, 2023 IST | 1newsnationuser3
ஸ்டாலின் ஸ்டைலில் ராகுல் காந்தி … திமுக அரசின் திட்டம் தெலுங்கானாவில் வாக்குறுதியாக … என்னென்ன தெரியுமா
Advertisement

தெலங்கானாவில் பெண்களுக்கு மாதம் 4 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

Advertisement

தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்குடன் இரு கட்சிகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டம் காலேஷ்வரம் என்ற இடத்தில் நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், தெலங்கானா முதல்வர் சநதிரசேகர் ராவ் 1 லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார்'' என்று குற்றம்சாட்டினார். இப்படி கொள்ளையடித்து சொத்து சேர்த்த அவரது ஊழலால் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் பெற்று பயனடைவார்கள். அந்தத் தொகையை அவர்கள் சேமிக்க முடியும். இதன் முதற்கட்டமாக மாதம் ரூ. 2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும். சிலிண்டர் மானிய விலையில் ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ.1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுதான் மக்களின் அரசு என்றும் ராகுல் காந்தி பிரசாரத்தில் பேசினார். அதாவது தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவதை பின்பற்றி ராகுல்காந்தி இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார்.

Tags :
Advertisement