For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சீறி வரும் காளைகள்..!! அடக்கும் காளையர்கள்..!! தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு..!!

07:29 AM Jan 16, 2024 IST | 1newsnationuser6
சீறி வரும் காளைகள்     அடக்கும் காளையர்கள்     தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு
Advertisement

உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடைபெற்று 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், வேலு என்கிற காளை சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கிற்கு கார் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 7 மணிக்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது ஆன்லைன் டோக்கன்பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக ஒரு நிசான் கார் மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கப்படுகிறது.

இரண்டாது சிறந்த களம் காணும் காளைக்கு, கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், இரண்டாம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது. போட்டியின்போது சிறப்பாக களம்கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

Tags :
Advertisement