உடல் உறுதிக்கு உரமூட்டும் ராகி.. மலச்சிக்கல் தீர்வு முதல் எடை குறைப்பு வரை இதில் இத்தனை நன்மைகளா?
பொதுவாக தானியங்களில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் அதிகமாக தானியங்களை சாப்பிட்டு தான் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகமாக பயிர் செய்யப்படும் ராகியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ராகி ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. இது கேப்பை, கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. ராகியில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி , கால்சியம் , புரதம் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது.
அந்த அளவிற்கு ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை அளித்து உடலில் அதிசயத்தை ஏற்படுத்தக் கூடியது. ராகியை மாவாக தயாரித்து ராகி தோசை, ராகி உப்புமா, ராகி இடியாப்பம், ராகி கூழ், ராகி களி என்று பலவகையில் தயார் செய்யலாம்.
இதில் குறிப்பாக பலருக்கும் ராகி கூழ் மற்றும் ராகி களி தான் பிடித்தமானதாக இருந்து வருகிறது. ராகி கூழ் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிட்டால் போதும். உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை பிரச்சனையை தீர்க்கும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.
நம் உடல் இயங்க முக்கியமான ஊட்டச்சத்து புரோட்டின். இது ராகியில் அதிக அளவு நிறைந்துள்ளதால் இதை உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலுறுப்புகள் சீராகவும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட உதவுகிறது. முக்கியமாக இளமையில் நரை முடி மற்றும் சரும வறட்சி, சருமத்தில் சுருக்கம் போன்றவற்றை சரி செய்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
Read more ; பொதுமக்களின் குறை தீர்ப்புக்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 13 நாட்களாக குறைப்பு…!