For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Raayan movie Collection | முதல் நாளே வசூல் வேட்டையில் மாஸ் காட்டிய ராயன்..!! தனுஷ் கரியரில் புதிய சாதனை..

'Raayan' box office Day 1: Dhanush's film opens to Rs 12 crore
10:56 AM Jul 27, 2024 IST | Mari Thangam
raayan movie collection   முதல் நாளே வசூல் வேட்டையில் மாஸ் காட்டிய ராயன்     தனுஷ் கரியரில் புதிய சாதனை
Advertisement

நடிகர் தனுஷ், தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை எந்த இயக்குனருக்கும் கொடுக்காமல், தானே இயக்கி நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில், வடசென்னை பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, தூஷரா விஜயன், பிரகாஷ்ராஜ், சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தனுஷின் ரசிகர்கள் இந்த படத்தை நேற்று ஆரவாரத்தோடு வரவேற்ற நிலையில், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து முதல் நாளே மிகப்பெரிய வசூலை ஈட்டி உள்ளது.

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் ராயன் படம் வசூல் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி  ராயன் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 12.5 கோடி வசூலித்துள்ளது. தமிழில் இப்படம் 11 கோடியும் தெலுங்கில் 1.5 கோடியும் படம் வசூலித்துள்ளது. இந்தி ரசிகர்கள் மத்தியில் ராயன் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் இருந்தபோதும் அங்கு படம் பெரியளவில் வசூலிக்கவில்லை. தனுஷின் கரியரில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படமாக ராயன் அமைந்துள்ளது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Read more ; NEET UG 2024 | திருத்தப்பட்ட மதிப்பெண் முடிவுகளை வெளியிட்டது NTA..!! கவுன்சிலிங் விரைவில் தொடங்கும்

Tags :
Advertisement