முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

R.S.Bharathi | ’வரும் தேர்தலில் அதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடும் தெரியுமா’..? ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..!!

08:54 AM Mar 02, 2024 IST | 1newsnationuser6
Advertisement

'நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Advertisement

திருவொற்றியூரில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மற்றும் வட சென்னை
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆர்எஸ் பாரதி, 'பாஜக வரலாறு தெரியாமல் பேசுகிறது. 1962-ல் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக வளர்ந்து விடும் என்ற நோக்கத்தில் அன்றே மத்திய அரசு தடை சட்டத்தை கொண்டு வந்தது.

153 ஏ என்ற பிரிவை சேர்த்து, 7 ஆண்டுகள் தண்டனைக் கொடுத்து திமுகவுக்காகவே சட்டத்தை திருத்தினார்கள். அந்த தடையும் மீறி வளர்ந்த இயக்கம் திமுக என்றும் மோடி மறந்துவிடக்கூடாது. பாஜகவின் அன்றைய பெயர் ஜன சங்கம். அவர்கள் சின்னம் அகல் விளக்கு. எமர்ஜென்சி நேரத்தில் பயந்து கட்சியை கலைத்து ஓடிய கும்பல் பாஜக. எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும்போது அண்ணா திமுக என்று ஆரம்பித்தார். எமர்ஜென்சி நேரத்தில் அனைத்து இந்திய அண்ணா திமுக என்று மாற்றினார். ஆனால் சிகப்பு கொடியையும், திமுக என்ற பெயரையும் மாற்ற மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர்.

இந்தியாவிலேயே கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்ற நாளிலிருந்து இன்று வரை ஒரே சின்னத்தில் போட்டியிடும் கட்சி திமுக. அதிமுக வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் இருக்கும் என்பதே தெரியவில்லை. மோடி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நேருவைவிட நீங்கள் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. இந்தியா கூட்டணி 300 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார்.

Read More : Polio | பெற்றோர்களே..!! நாளை (மார்ச் 2) மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement
Next Article