வந்தாச்சு QR Code..!! இனி நீங்கள் வாங்கும் மருந்து, மாத்திரைகள் போலியானதா என்பதை ஈசியா கண்டுபிடிக்கலாம்..!!
தற்போது காலகட்டத்தில் பலரும் பல வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றன. மருத்துவர்களிடம் சென்றால், ஏராளமான மாத்திரைகளை எழுதி தருவார்கள். சில மருந்து, மாத்திரைகள் போலியாக இருப்பதால், அதை சாப்பிடும்போது, நமக்கு மேலும் பல உடல்நல பாதிப்புகள் உண்டாகிறது. இதனை தவிர்க்க போலி மருந்துகளை அடையாளம் காண்பது எப்படி..? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவமனைக்கு செல்லும்போது, மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைக்கும் மாத்திரைகளை ஒரு சில சமயம், எத்தனை சாப்பிட்டாலும் நோய் குணமாகாது. மீண்டும் மருத்துவரிடம் சென்றால், அவர் மருந்துகளை மாற்றி எழுது தருவார். அதை சாப்பிட்டாலும், ஒரு சிலருக்கு குணமாகாது. எனவே, நீங்கள் வாங்கியது போலியான மருந்தா என்பதை எப்படி கண்டுபிடிப்பது..? அதுகுறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
அந்த வகையில், போலி மருந்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருந்து அட்டையிலும் QR குறியீட்டை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், அந்த மருந்தைப் பற்றிய முழு விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மருந்தின் பெயர், தயாரிப்பு நிறுவனம், மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மருந்து அட்டையை ஸ்கேன் செய்யும்போது 'NO RECORDS FOUND' என்று வந்தால், அந்த மருந்து போலியானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த QR குறியீடு அனைத்து மருந்துகளிலும் இருக்காது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்து அட்டைகளில் மட்டுமே இந்த கியூஆர் கோடு இடம்பெற்றிருக்கும்.
Read More : ”மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது”..!! அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடு..!!