மலைப்பாம்பின் பிடியில் தாய்லாந்து பெண்.. இரண்டு மணி நேர போரட்டத்திற்கு பிறகு மீட்பு..!! - வைரலாகும் வீடியோ
மலைப்பாம்புகள் உலகின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. இந்த பாம்பு அதன் இரையை முழுவதுமாக விழுங்கும். அது விலங்காக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, மலைப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இருப்பினும், ஒரு பெண் மலைப்பாம்புடன் இரண்டு மணி நேரம் போராடி தன்னை விடுவித்துக் கொண்டார். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்காலம்..
பெண்ணின் உடலைச் சுற்றிய மலைப்பாம்பு : ஒரு பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில், மலைப்பாம்பு பெண்ணின் முழு உடலையும் சுற்றிக் கொண்டு, அவரை இரையாக்க முயற்சி செய்கிறது. அதே நேரத்தில் பெண் தைரியமாக எதிர்த்துப் போராடுகிறார். மலைப்பாம்பின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிகளை செய்தார். இறுதியில், மீட்புக் குழுவினர் அந்தப் பெண்ணை மலைப்பாம்பின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்தனர்.
வீடியோவில் காணப்படும் பெண் தாய்லாந்தைச் சேர்ந்தவர், ஆரோம் அருண்ரோஜே (வயது 64) என்ற பெண், தனது சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தபோது திடீரென மலைப்பாம்பு ஒன்று தன்னைத் தாக்கி சுருட்டியதாக கூறினார். மலைப்பாம்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தும், அந்த பாம்பு அவரை மிகவும் இறுக்கமாகப் பிடித்தது, அவளால் நிற்க கூட முடியவில்லை. படிப்படியாக, மலைப்பாம்பு அதன் பிடியை மிகவும் இறுக்கியது,
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் . அவர்கள் உடனடியாக அதிகாரிகளை அழைத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு அவசர குழுவை வரவழைத்தனர். சிறிது நேரத்தில் மீட்புக் குழுவினர் வந்தனர். குழுவினர் சென்றடைந்தபோது, மலைப்பாம்பு பெண்ணின் கழுத்தை சுருங்கச்செய்து, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான நிலையில் முதலில் மலைப்பாம்பின் வாயை பிடித்து இழுத்த குழுவினர், பின்னர் மெதுவாக பெண்ணை விடுவித்துள்ளனர். அவளைக் காப்பாற்ற குழு குறைந்தது இரண்டு மணிநேரம் எடுத்தது. இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.