முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'ரூ.2000 கோடிக்கு பாப்கார்ன் விற்ற PVR Inox' டிக்கெட் விற்பனையை விட உணவு விற்பனையில் வளர்ச்சி..!!

03:02 PM May 22, 2024 IST | Mari Thangam
Advertisement

PVR திரையரங்குகள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான திரைப்பட டிக்கெட் விற்பனை 19% அதிகரித்துள்ள நிலையில், உணவு மற்றும் குளிர்பான விற்பனை 21% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement

2023 ஆம் ஆண்டு பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் உணவுப் பொருட்களின் விற்பனை குறித்த தகவலை Money Control என்கிற தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-2024 நிதியாண்டில் PVR ஐனாக்ஸ் திரையரங்கச் சங்கிலி நிறுவனம் உணவு மற்றும் குளிர்பான விற்பனை மூலம் மட்டுமே பெரும் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் என்றால் அதில் முதல் வாரத்தில் 70 சதவீதம் தயாரிப்பாளருக்கும் 30 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் சேர்கிறது. இதனால் தான் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் விலை பலமடங்கு அதிகமாக இருக்கிறது.

திரையரங்கு நிறுவனங்கள் பொதுவாக அதிகப்படியான லாபம் பார்ப்பது உணவு மற்றும் குளிர்பான என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த ஆண்டு டிக்கெட் விற்பனையில் கிடைத்த வருவாய் வளர்ச்சியை காட்டிலும் உணவு மற்றும் குளிர்பான விற்பனையில் அதிக வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

PVR திரையரங்குகள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான திரைப்பட டிக்கெட் விற்பனை 19% அதிகரித்துள்ள நிலையில், உணவு மற்றும் குளிர்பான விற்பனை 21% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு PVR-ன் உணவு விற்பனை ரூ.1,618 கோடியிலிருந்து, இந்த ஆண்டு வருவாய் ரூ.1,958 கோடியாக உயர்ந்துள்ளது 21% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் திரைப்பட டிக்கெட் வருவாய் ரூ.2,751 கோடியாக இருந்த நிலையில், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.3,279 கோடியாக அதிகரித்துள்ளது.

உணவு பிரிவில் வளர்ச்சி அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் PVR ஐனாக்ஸ் குழுவின் தலைமை நிதி அதிகாரி நிதின் சூத், இந்த ஆண்டு அதிகப்படியான சூப்பர் ஹிட் படங்கள் இல்லாததால் டிக்கெட் வருவாய் வளர்ச்சியை காட்டிலும், உணவு பொருட்கள் விற்பனையில் அதிகப்படியான வளர்ச்சியின் போக்கு காணப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article