Paris Olympics 2024 | பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் பிவி சிந்து!! ஒலிம்பிக் 6-வது நாளில் நடந்தது என்ன?
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார். ஜியாவோ 21-19 மற்றும் 21-13 என்ற கணக்கில் சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கில், அதே சீன வீரரை வீழ்த்தி இந்திய வீராங்கனை பதக்கம் வென்றிருந்தார். அதேசமயம் பாட்மிண்டனில், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் காலிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்து வெளியேறினர். இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.
ஒலிம்பிக்கின் ஆறாவது நாள் ;
ஒலிம்பிக் போட்டியின் ஆறாவது நாளில் இந்தியா மூன்றாவது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். ஆனால் மறுபுறம் ஏமாற்றமும் இருந்தது. பிவி சிந்துவுடன் பிரணாய் ராய் பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது . எனினும் இதுவரை எந்த வீரரும் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிடம் இருந்து நாடு மீண்டும் தங்கப் பதக்கத்தை எதிர்பார்க்கிறது.
Read more ; உலகில் இரத்த மழை பெய்யும் நாடு!. எது?. என்ன காரணம் தெரியுமா?. சுவாரஸ்யங்கள்!