மீண்டும் புதின்!… 71 வயதில் 5வது முறையாக ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றார்!
Putin: ரஷ்ய அதிபராக 5வது முறையாக புதின் பதவியேற்றுக் கொண்டார். அதிபர் மாளிகையான கிரம்ளினில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் புதின் பதவியேற்றுக் கொண்டார்.
71 வயதான புதின் அடுத்த 6 ஆண்டுகள் ரஷ்ய அதிபராக பதவி வகிக்க உள்ளார். உக்ரைன் மீதான போர், அதனால் உலக நாடுகளுடன் பகை, உள்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளிட்ட பலவேறு இடையூறுகளுக்கு மத்தியில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தல் புதின் 87 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரஷ்யா முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினை தொடர்ந்து அதிக ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த நபர் என்ற சிறப்பை புதின் பெற்றுள்ளார். 2030ஆம் ஆண்டு அதிபர் புதினின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு உள்ள நிலையில், அதன் பின்னரும் அவர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.
ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான கிரம்ளினில் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அதிபர் புதின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது தனது கைகளை வைத்து குழுமியிருந்த மக்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவியேற்பு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை கையாண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகள் ஓரணியில் திரண்டன. அதிபர் புதின் மட்டுமின்றி அந்நாட்டின் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டன.
பல்வேறு நாடுகளில் ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதிபர் புதின் உள்ளிட்ட முக்கிய ரஷ்யத் தலைவர்கள் மீது பல்வேறு நாடுகள் தடை விதித்தன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவிலும் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசுக்கு எதிராக மக்கள் போராடினர். அரசுக்கு எதிராக போராடிய மக்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ரஷ்ய அதிபராக புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Readmore: பலரால் முதுகில் குத்தப்பட்டேன்!… தாய்க் கழகத்துடன் இணையும் மதிமுக?… வைகோ திட்டவட்டம்!