For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அப்படி போடு..!! இந்தியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை..? பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்..!!

BCCI Secretary Jai Shah has said in an interview to a TV channel that the Women's World Cup will not be held in India.
01:52 PM Aug 15, 2024 IST | Chella
அப்படி போடு     இந்தியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை    பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்
Advertisement

இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்தப்படுமா? என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு பெரும் கலவரம் நிலவிவரும் நிலையில், அங்கு திட்டமிட்டபடி உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடத்தப்படாது என்று தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா கூறுகையில், ”வங்கதேச கலவரத்தை தொடர்ந்து, மகளிர் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து ஐசிசி முறையிட்டது. மழைக்காலம் என்பதால் இந்தியாவில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இதனால், அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை நடத்தும் எண்ணம் இல்லை. அதேபோல், இந்தியாவில் பிங்க் பால் (இரவு நேர டெஸ்ட்) போட்டிகள் நடத்தும் எண்ணமும் இல்லை. பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் இரண்டு நாட்களில் முடிவடைந்துவிடும். இதனால், பார்வையாளர்களும், ஒளிப்பரப்பாளர்களும் பணத்தை இழக்கின்றனர். ரசிகர்கள் 5 நாட்கள் டெஸ்ட் போட்டியை பார்க்க டிக்கெட் வாங்குகின்றனர். இரண்டு நாட்களில் போட்டி முடிவடைந்தால், அவர்களுக்கு பணம் திருப்பி தரும் நடைமுறை இல்லை” என்று தெரிவித்தார்.

Read More : 7 கிலோ வரை மளமளவென குறையும் உடல் எடை..!! பிரபல நடிகை சொன்ன கேரள பானத்தின் ரகசியம்..!!

Tags :
Advertisement