For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகர் அல்லு அர்ஜூன் பர்த் டே ட்ரீட்!! வெளியானது புஷ்பா 2 டீசர்!

01:54 PM Apr 08, 2024 IST | Mari Thangam
நடிகர் அல்லு அர்ஜூன் பர்த் டே ட்ரீட்   வெளியானது புஷ்பா 2 டீசர்
Advertisement

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

Advertisement

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா.  சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். தமிழ்,  தெலுங்கு,  இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்தது.

இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது.

முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என வெளியான நிலையில், இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற கேப்ஷனுடன் ரிலீஸானது. முதல் பாகம் புஷ்பா கேரக்டரில் அல்லு அர்ஜுன் எப்படி எழுச்சிப் பெறுகிறான் என உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியாகவுள்ள இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல், அல்லு அர்ஜுன் எப்படி செம்மரக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவனாக விஸ்வரூபம் எடுக்கிறான் என்பது தான் ஒன்லைன். இதில் அல்லு அர்ஜுனுக்கும் ஃபஹத் பாசிலுக்கும் இடையேயான மோதல் முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புஷ்பா 2 டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சேலை கட்டிக் கொண்டு என்ட்ரியாகும் அல்லு அர்ஜுன், ஆக்‌ஷனில் மிரட்டியுள்ளார். இதனால் இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களுக்கு தரமான ஆக்‌ஷன் ட்ரீட் காத்திருக்கிறது.

Tags :
Advertisement