புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன்.. மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடம்..!! வாய் திறக்காத அல்லு அர்ஜூன்..
புஷ்பா வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2 தி ரூல். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக 12000க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த நிலையில் தான் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்திற்கு ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 5ஆம் தேதி அதிகாலையில் வெளியான புஷ்பா 2 படத்தை பார்க்க ரசிகர்கள் நள்ளிரவு முதல் நீண்ட நேரம் தியேட்டர் வாசலிலேயே காத்திருந்தனர். அதுவும் ஹைதராபாத்தில் பிரபலமான திரையரங்கான சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர். படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், ரேவதி என்ற ரசிகையும் அவரது மகனும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களை உடனடியாக துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பூகம்பமாக வெடித்த நிலையில் அந்த ரசிகை ரேவதியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த ரேவதியின் 9 வயது மகன் ஸ்ரீதேஜ் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத் காவல் ஆணையர் சி.வி.ஆனந்த் மற்றும் தெலங்கானா மாநில சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டினா ஆகியோர், அரசு சார்பில் மருத்துவமனைக்கு சென்று, சிறுவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஆனந்த், மூச்சுத்திணறல் காரணமாக ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும், குணமடைய நீண்ட காலம் ஆகும் என்றும் தெரிவித்தார். மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விரைவில் குணமடைவார் என நம்புவதாகவும் கூறினார்.
Read more ; மாதம் ரூ.75,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..? நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!