”புஷ்பா 2” சிறப்பு காட்சி..!! திரையரங்கில் போலீசார் தடியடி..!! கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து அல்லு அர்ஜூன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டன.
ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர். இந்த சிறப்புக் காட்சிக்காக நேற்றிரவு முதலே திரையரங்கு முன் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். அப்போது ரசிகர்கள் சிதறி ஓடிய நிலையில், பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
Read More : உங்கள் கனவில் பேய், ஆவியுடன் பேசினால் என்ன அர்த்தம்..? இறந்த ஜோடியை கண்டால் என்ன நடக்கும்..?