For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு! - 2ஆவது இடத்திற்கு செல்லுமா சன்ரைசர்ஸ்?

04:33 PM May 19, 2024 IST | Mari Thangam
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு    2ஆவது இடத்திற்கு செல்லுமா சன்ரைசர்ஸ்
Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Advertisement

17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69 வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 13 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. அதோடு, 2ஆவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதோடு, 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் 2ஆவது இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB வெற்றிக்கு தோனி காரணமா? – தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!

Advertisement