பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை பிறந்தது..!! குவியும் வாழ்த்து..!!
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி குர்பிரீத் கவுருக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தனது முதல் மனைவியை கடந்த 2015ஆம் ஆண்டில் பகவந்த் சிங் மான் விவாகரத்து செய்தார். இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவர் குர்பீரித்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி டாக்டர் குர்பிரீத் கவுருக்கு இன்று மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது பகவந்த் மானின் மூன்றாவது குழந்தையாகும். அவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தனக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பகவந்த் மான், “ கடவுள் ஒரு மகளைக் கொடுத்திருக்கிறார். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைப்பு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!