"ஒத்த லைக் தான்.., 20 லட்சம் ஸ்வாஹா."! சாப்ட்வேர் இன்ஜினீருக்கே விபூதி அடித்த கும்பல்.! பரபரப்பு சம்பவம்.!
ஆன்லைன் மூலமாக பண மோசடி செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களை விதவிதமாக புதுவித யோசனையுடன் மோசடிக்காரர்கள் தினம் தினம் ஏமாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு மோசடிகளை நாம் கேள்விப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டின் முதல் மோசடி தற்போது நடைபெற்று இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான அவிநாசி என்பவர் புனே நகரில் தனது வீட்டிலிருந்து வேலை செய்து வந்திருக்கிறார். வொர்க் ப்ரம் ஹோம் முறையில் விளம்பரங்களை லைக் செய்தால் சம்பளம் தருவதாக கூறியதை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக பணியாற்றிய இதைத் தொடர்ந்து அவருக்கு அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வந்திருக்கிறது . மேலும் நிறுவனமும் குறித்த நேரத்தில் இவருக்கான சம்பளத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் அதிகமான பணத்தை இந்த வேளையில் முதலீடு செய்து இருக்கிறார் அவினாஷ். ஆனால் முன்பு எதிர்பார்த்தது போல் தற்போது பணம் வரவில்லை. இது தொடர்பாக நிறுவனத்திடம் கேட்டும் முறையான பதில் இல்லை. இவரது பணத்தையும் திரும்ப பெற முடியாமல் தவித்து இருக்கிறார். இவரிடமிருந்து 20 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை மோசடி முறையில் திருடி இருக்கிறது அந்த கும்பல். மேலும் இவர் பணம் செலுத்திய பின் அந்த வங்கிக் கணக்கையும் முடக்கி விட்டார்கள்.
இதனால் தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இவரது காரின் அடிப்படையில் வழக்கு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய போதும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.