கியான்வாபி: "30 ஆண்டுகளுக்குப் பின் மசூதியில் தொடங்கிய பூஜை" பக்தர்கள் மகிழ்ச்சி.!
உத்திர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து வாரணாசி நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மசூதியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை 834 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் உடைந்த இந்து தெய்வங்களின் சிலை மற்றும் சிவலிங்கம் இருந்ததற்கான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மசூதியில் இந்து பக்தர்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.கியான்வாபி மசூதியின் சீல் செய்யப்பட்ட அடித்தளத்தின் எல்லைக்குள் இந்து பக்தர்கள் தங்கள் வழிபாடுகளை செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதாக இந்தக் கோவிலில் வழிபாடு செய்து வந்த வியாசா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கியான்வாபி மசூதியின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பூஜை சடங்குகள் இன்று தொடங்கியது. மாவட்ட நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து இந்து மக்கள் தங்கள் பூஜை மற்றும் வழிபாடுகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர். 1992 ஆம் வருடம் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து 1993-இல் இந்து சமய வழிபாடுகள் தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வழிபாடு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
.
இந்தக் கோவிலில் வழிபாடு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ஒரு பக்தர் " அதிகாலை 3-3.30 மணிக்கு வழிபாடு செய்வதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ச்சிவசப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் இந்த கோவிலில் தரிசனம் செய்வது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் எனவும் தெரிவித்திருக்கிறார் .