முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'UG/PG/B.ED' முடித்தவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு.! ரூ.40,000/- வரை சம்பளம்.! வாய்ப்பை தவற விடாதீங்க.!

09:02 PM Feb 06, 2024 IST | 1newsnationuser7
Advertisement

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 407 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை அரசு விதிகளின்படி வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை 23.02.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படவில்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய py.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags :
employment newsGood Salarygovt jobsGraduate Teachersjob offer
Advertisement
Next Article