மகிழ்ச்சி செய்தி...! அரசு பள்ளி உபரி ஆசிரியர்களுக்கான பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு...! முழு விவரம் உள்ளே...
2023 -24 கல்வி ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 20.12.2023 அன்று நடைபெறுதல் தொடர்பான பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.
இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கான பணியாளர் நிர்ணயம் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நிர்ணயிக்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தொடர்ந்து அதே பணியிடங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படும் சூழலில் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும், அரசுத் தணிக்கையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை சுட்டிக்காட்டி பல்வேறு தணிக்கைத் தடைகள் எழுப்பப்பட்டுள்ளமை, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
அதன் படி, 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் பள்ளி வாரியாக பாட வாரியாக, பதவி வாரியாக இத்துடன் இணைக்கப்பட்ட படிவம் (1)-இல் தயார் செய்யப்படவேண்டும். தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில் அரசு மான்யம் பெறும் உபரி பணியிடத்தில் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் இளையவர் உபரி ஆசிரியராக கருதப்பட வேண்டும்.
கூட்டு மேலாண்மைப் பள்ளிகளைப் பொறுத்த வரையில், அம்மேலாண்மையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்களால் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட அரசு மான்யம் பெற்றுவரும் பணியிடங்களில் நாளது தேதியில் காலியாக உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில், தங்கள் மேலாண்மையின் கீழ் உபரி எனக் கண்டறியப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் பணி மாறுதல் ஆணையினை தொடர்புடைய கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கூட்டு மேலாண்மை முகவாண்மையும் தங்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு நிதி உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை படிவம் 2(A)இல் பூர்த்தி செய்து 20.11.2023-க்குள் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கூட்டு மேலாண்மைப் பள்ளி நிர்வாகம் தங்களது நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் உபரி ஆசிரியர்களை நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்களில் பணிநிரவல் செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 28.11.2023-க்குள் நிறைவடைய வேண்டும்.
ஒவ்வொரு கூட்டு மேலாண்மை முகவாண்மையும் தங்களது நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்துப் பள்ளிகளுக்குமான பணியாளர் நிர்ணய ஆணையின் நகல், பணியாளர் நிர்ணய ஆணையின்படி உபரி எனக் கண்டறியப்பட்ட அரசு மான்யத்தில் ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள் விவரம், அவர்களுக்கு நிர்வாகத்தின் மூலம் பணிநிரவல் செய்து மாறுதல் ஆணை வழங்கப்பட்ட விவரம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் (2(B).இல் பூர்த்தி செய்து தொடர்புடைய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் 29.11.2023-க்குள் ஒப்படைக்க வைக்க வேண்டும். கூட்டு மேலாண்மை முகவாண்மைகளிடமிருந்து பெறப்படும் அறிக்கையைப் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிசீலனை செய்து குறிப்பிட்ட கூட்டு மேலாண்மையின் கீழ் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் பரி ஆசிரியர்கள் முறையாக பணி நிரவல் செய்யப்பட்டுள்ளார்களா என்பதனை உறுதிப்படுத்தி தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களால் விதிகளின்படி பணிவிடுப்பு / பணியேற்பிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும். இப்பணி நிரவல் ஆணைகள் / விவரங்கள் EMIS இணையதளத்தில் தொடர்புடைய மாவட்டத்தின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் 30.112023 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.