முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

IBPS Job Recruitment : பொதுத்துறை வங்கிகளில் கொட்டி கிடக்கும் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

State Bank of India (IBPS) has issued a recruitment notification for the vacant posts of Probationary Officer in its various departments.
04:54 PM Dec 31, 2024 IST | Mari Thangam
Advertisement

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தன்னுடைய பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.

Advertisement

காலிப்பணியிடங்கள் விவரம்:  மொத்தமாக 600 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 240 காலியிடங்கள் பொதுப் பிரிவிலும், 360 இடங்கள் இட ஒதுக்கீடு பிரிவிலும் உள்ளது. இட ஒதுக்கீட்டில் எஸ்.சி பிரிவினருக்கு 87 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 43 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 158 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவினருக்கு 58 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தகுதி :  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 20 முதல் 30 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி ஓ.பி.சி பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : ஊதியம் தகுதிக்கு ஏற்ப 48,000 முதல் 85000 வரை இருக்கும்

எப்படி விண்ணப்பிப்பது ? விருப்பமுள்ளவர்கள் sbi.co.in என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி 16.01.2025 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது தேர்வர்கள் ஜனவரி 1 ம் தேதி மதியம் 11.59 க்குள் விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

Read more ; இரண்டாவதாக நியூசிலாந்து நாட்டில் பிறந்தது புத்தாண்டு.. வான வேடிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்ற மக்கள்..!!

Tags :
Probationary OfficerPublic Sector Bankvacant posts
Advertisement
Next Article