ஏப்.19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!
மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. நாடு முழுவதும் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகளை 48 மணி நேரத்தில் அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வரும் மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.