மாணவர்களே சூப்பர் வாய்ப்பு...! பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் பிப்ரவரி 28-ம் தேதி வரை பெறலாம்...!
சேலம் மாவட்டத்தில் தனித்தேர்வர்களால் பெறப்படாத 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை சேலம் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 28.03.2025 தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவங்களில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சேலம்-1, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தேர்வு திட்ட விதிமுறைகளின்படி மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுக்குப் பின்னர் அழிக்கப்படும். எனவே, மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவங்களில் தேர்வெழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறப்படாத தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும் என்பதால் இத்தருணத்தை பயன்படுத்தி ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு பெயர், பதிவெண், தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், சேலம்-01 என்ற முகவரியில் 28.03.2025 தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மேற்கண்ட விவரப்படி, மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவத்திற்கு பின் தேர்வெழுதிய பருவங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்களின் நலன் கருதி மூன்று மாத காலங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே, மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவங்ககளுக்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை 28.03.2025 அன்றுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.