முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Public Exam 2024 : 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்...! வெளியான அறிவிப்பு....

05:50 AM Feb 24, 2024 IST | 1newsnationuser2
Advertisement

Public Exam 2024: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி..?

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள "SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 HALL TICKET DOWNLOAD"என்ற வாசகத்தினை "Click செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் (Science Practical Examinations) 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதி கிடையாது. பொதுத்தேர்விற்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Public Exam 2024 : Hall ticket for class 10 students from 2 pm today

Advertisement
Next Article