For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Chennai : ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றனுமா? நாளை ஊருக்குகே வரும் ஆபிசர்ஸ்..!! மிஸ் பண்ணிடாதீங்க..

Public Distribution Scheme People's Grievance Redressal Camp is going to be held across Chennai on 9th November.
09:49 AM Nov 08, 2024 IST | Mari Thangam
chennai   ரேஷன் கார்டில் பெயர்  முகவரி மாற்றனுமா  நாளை ஊருக்குகே வரும் ஆபிசர்ஸ்     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

ரேஷன் கார்டில் முகவரி மாற்றுவது, ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயர் சேர்ப்பது, ரேஷன் கார்டில் செல்போன் எண்களை பதிவு செய்வது, ரேஷன் கார்டில் திருமணமான மகன் அல்லது மகள்களின் பெயரை நீக்குவது, புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றால், ஆன்லைனில் மேற்கொள்ளலாம். ஆனால் அப்படி ஆன்லைனில் மேற்கொண்டால் உடனே தீர்வு கிடைக்காது.

Advertisement

இந்த சூழலில் அதிகாரிகள் அனைவரும் மக்களை தேடி செல்லும் வகையில் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. அந்த முகாம்களில் சென்றுவிண்ணப்பிங்களை தந்தால் உடனடி தீர்வு கிடைக்கும். வருவாய்துறை , பொதுவிநியோகத்துறை என பல்வேறு துறைகள் அப்படி முகாம்களை அடிக்கடி நடத்தும். அந்த வகையில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் நவம்பர் 9ம் தேதி அன்று சென்னை முழுவதும் நடக்க உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது வினியோக திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி, இந்த (நவம்பர்) மாதத்துக்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் வருகிற 9-ந் தேதியன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Read more ; Garuda Puranam : நீங்கள் இறக்கும் கடைசி நொடியில் உங்கள் கண்களுக்கு என்ன தெரியும்?

Tags :
Advertisement