முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்...!

09:34 AM Jan 01, 2024 IST | 1newsnationuser2
Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்.

விண்வெளியில் பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடந்த 8 ஆண்டுகளாக தகவல்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

Advertisement

இந்த பி.எஸ்.எல்.வி. சி-58 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. எக்ஸ்போசாட்" செயற்கைக்கோளை சுமந்து சென்ற பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நிறமாலை, தூசு, கருந்துளை, வாயுக்களின் மேகக்கூட்டமான "நெபுலா" குறித்து ஆய்வு செய்ய உள்ளது. எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக எக்ஸ்பெக்ட், போலிக்ஸ் ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Tags :
andhraIsroPslv rocketRocket
Advertisement
Next Article