முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்..!

PSLV C-60 rocket successfully launched from the Satish Dhawan Space Research Center in Sriharikota, Andhra Pradesh.
10:06 PM Dec 30, 2024 IST | Kathir
Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

Advertisement

pslv c60: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டுக்கான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இஸ்ரோ இந்த பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை முதலில், இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.

சுற்று வட்டப்பாதையில் பிற செயற்கைகோள்களின் நெருக்கடி காரணமாக பின்னர் இரவு 10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. மேலும் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன என்றும், ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக விஞ்ஞானிகள் தகவல்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோதீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'ஸ்பேடெக்ஸ்' (SpaDeX) எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. விண்வெளியில் ஸ்பேஸ் டாக்கிங் உள்பட 24 ஆய்வுகளை மேற்கொள்கிறது.

இந்த 'ஸ்பேடெக்ஸ்' (SpaDeX) திட்டத்துக்காக பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இன்று சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்படவுள்ளது. தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவைகளை இணைய செய்வதற்கான(space docking technology) சோதனை வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா சீனா இந்த மூன்று நாட்டை தொடர்ந்து இதை சாதித்த 4வது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் இருந்து மண் துகல்களை பூமிக்கு கொண்டு வந்து ஆராய்ச்சி செய்ய இந்த space docking technology உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், விண்வெளி ஆய்வு மையம் அமைக்கவும், இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ஒரு சிகரெட், ஆண்களுக்கு 17 நிமிடமும்.. பெண்களுக்கு 22 நிமிடமும் ஆயுளை குறைக்கும்..!! – ஆய்வில் அதிர்ச்சி

Tags :
Isropslv c60 rocketpslv c60 rocket successspace docking technologySpaDeXபி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
Advertisement
Next Article