For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முக்கிய அறிவிப்பு...! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்...!

06:08 AM May 11, 2024 IST | Vignesh
முக்கிய அறிவிப்பு     10 ம் வகுப்பு மாணவர்களுக்கு  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
Advertisement

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 13-ம் தேதி முதல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 13.05.2024 முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ( Provisional Certificate ) பதிவிறக்கம் செய்து , அச்சான்றிதழ்களில் விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் உள்ள கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் 13.05.2024 அன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம்.

மாணவர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) சரிபார்த்து. அவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம். பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின். தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சான்றொப்பமிட்டு மாணவர்களுக்கு அளித்திட வேண்டும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக. அத்திருத்தங்களை பின்னர் இவ்வியக்கத்தால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் "Refer Original Certificate" என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement