முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவிக்கு நீதி கேட்டு தடையை மீறி பேரணி..!! நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் அதிரடி கைது..!!

Police arrested BJP members, including actress Khushbu, who tried to march in violation of the ban.
11:46 AM Jan 03, 2025 IST | Chella
Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிக்கு நடந்த வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணியினர் மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக செல்ல முடிவு செய்தனர். இந்நிலையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜகவினர் மதுரையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் இன்று (ஜனவரி 3) பேரணி நடைபெறும் எனவும், இதனைத்தொடர்ந்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்த நிலையில், பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

Read More : காதல் ஜோடியை மிரட்டி பாலியல் சீண்டல்..!! கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு..!! ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி பின்னணி..!!

Tags :
சென்னைநடிகை குஷ்புபேரணிமதுரை மாவட்டம்மாணவி விவகாரம்
Advertisement
Next Article