முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Prostitution | வில்லிவாக்கத்தில் விபச்சார தொழில்..!! வில்லங்கமான ரேவதி..!! சுத்துப் போட்ட போலீஸ்..!!

04:20 PM Feb 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

Prostitution | சென்னையில் விபச்சார கும்பல்கள் போலீசுக்கு தெரியக்கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். அப்படி செயல்பட்டு வரும் விபச்சார கும்பல்களை போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கண்டுபிடிக்கின்றனர். அப்படித்தான் வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டில் நடந்திருக்கிறது. சென்னை வில்லிவாக்கம் சீயாலன் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபச்சார தொழில் நடப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

அதன் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், அந்த வீட்டை தீவிரமாக மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். ரகசியமாக வந்த தகவல்கள் உண்மை என்பதை உறுதி செய்த போலீசார், அங்கு விபச்சாரம் நடப்பதையும் உறுதி செய்தனர். இதையடுத்து வில்லிவாக்கம் சீயாலன் 2-வது தெருவில் விபச்சாரம் நடந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர். விபச்சாரத் தொழில் நடத்தி வந்த பட்டாளம் எத்திராஜ் கார்டன் தெருவை சேர்ந்த 35 வயதாகும் ரேவதி என்பவரையும் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் நடத்தியது உறுதியானது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட புரோக்கர் ரேவதி விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Read More : Rice Price | மேலும் உயர்ந்த அரிசி விலை..!! ஓட்டல் உணவுகளின் விலை தாறுமாறாக உயரும் அபாயம்..!!

Advertisement
Next Article