முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆயுர்வேத மசாஜ் சென்டரில் கொடி கட்டி பறக்கும் விபச்சார தொழில்..!! 7 அழகிகள்..!! கோவையில் வசமாக சிக்கிய கும்பல்..!!

The police raided an Ayurvedic massage center in Mettupalayam Road, Saibaba Colony, Coimbatore, and arrested 8 people, including 7 beauties who committed prostitution there.
04:39 PM Jul 25, 2024 IST | Chella
Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் ஆயுர்வேத மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனை நடத்திய போலீசார், அங்கு விபச்சாரம் நடத்திய 7 அழகிகள் உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

Advertisement

கோவை மாவட்டம் இடையர்பாளையம் சிவாஜி காலனி பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் செல்வம், மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் அருகே உள்ள தனியார் பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு இளைஞர் எதிரே ஆயுர்வேத மசாஜ் சென்டர் இருக்கிறது. அதில் ஏராளமான அழகிகள் இருக்கின்றனர். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கே வரிசையாக வந்து நின்ற அழகிகளை பார்த்ததும் செல்வம் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் நடந்த சம்பவங்களை கோவை சாய்பாபாபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆயுர்வேத மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்ற போலீசார் உள்ளே அதிரடியாக நுழைந்தனர். மசாஜ் சென்டரில் சுமார் 7 அழகிகளுடன் மேலாளர் உள்பட 8 நபர்கள் இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் ஆயுர்வேதிக் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது உறுதியானது.

விசாரணையில், மசாஜ் சென்டரை நடத்தி வருவது மகேஷ் என்பது தெரியவந்தது. அந்த ஆயுர்வேத மசாஜ் சென்டருக்கு மேலாளராக திருச்சி மாவட்டம் முல்லை வாசல் பகுதியைச் சேர்ந்த முகிலன் (23) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து பெண்களை கோவைக்கு வரவழைத்துள்ளனர். அவர்களுக்கு கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளனர். பின்னர், மசாஜ் சென்டரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக வாடிக்கையாளர்களை மசாஜ் சென்டருக்கு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு வாட்ஸ் அப்பில் பார்த்து ஆசையுடன் வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் என நிர்ணயம் செய்கின்றனர். பின்னர் உள்ளே சென்றவுடன் விருப்பத்திற்கு ஏற்ப அழகிகள் அவர்களிடம் பணம் வாங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.2,500 முதல் 20,000 வரையில் ஒரு நபருக்கு பணம் பெற்றுள்ளனர்.

இதில் பல ஆண்கள், தாங்கள் கொண்டு செல்லும் எல்லா பணத்தையும் இழந்திருக்கின்றனர். வெளியில் சொல்ல முடியாமல் இடத்தை மனவேதனையுடன் வெளியேறியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாய்பாபா காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 அழகிகள் மற்றும் ஒரு ஆண் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் மகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Read More : பெண்களே..!! செம குட் நியூஸ்..!! மகளிர் உரிமைத்தொகை மேலும் விரிவாக்கம்..? எப்போது தெரியுமா..?

Tags :
ஆயுர்வேத மசாஜ்கோவைமசாஜ் சென்டர்விபச்சாரம்
Advertisement
Next Article