முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.1,400 கோடிக்கு சொத்து..!! எக்கச்சக்க முதலீடு..!! வெளிநாடுகளில் குடியிருப்பு..!! யார் இந்த பெண் வேட்பாளர்..?

08:20 AM Apr 18, 2024 IST | Chella
Advertisement

கோவாவில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு மிரள வைக்கும் அளவுக்கு உள்ளது.

Advertisement

வரும் மக்களவை தேர்தலில் தெற்கு கோவா தொகுதியில் பாஜக சார்பில் பல்லவி (49) என்பவர் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை வேட்புமனு நேற்றைய தினம் தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கணவருடன் சேர்ந்து தனக்கு ரூ.1,400 கோடியில் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த வேட்புமனுவில், வேட்பாளர் பல்லவியும், கணவர் ஸ்ரீனிவாஸ் டெம்போவும் கால்பந்து, ரயில் எஸ்டேட், கப்பல் கட்டும் தொழில், கல்வி முதல் சுரங்கம் ஆகிய துறைகளில் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவிக்கு ரூ.255.4 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.28.2 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது.

கணவர் ஸ்ரீநிவாசுக்கு ரூ.994.8 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.83.2 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது. இவர்களுக்கு கோவாவை தவிர நாட்டின் பல இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இதை தவிர லண்டனில் ரூ.10 கோடி மதிப்புள்ள குடியிருப்பும், துபாயில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள குடியிருப்பும் உள்ளது. மேலும், பல்லவியிடம் ரூ.5.7 கோடி மதிப்பு தங்கம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : கரடிகளை வேட்டையாட அனுமதி..!! மானியமும் இருக்காம்..!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

Advertisement
Next Article