Property Rule : பத்திரப்பதிவு செய்தாலும் சொத்து உங்களுடையது கிடையாதா..? சொத்து மாற்றம் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா ?
பதிவு செய்வதன் மூலம் நீங்கள் நிலத்தின் முழு உரிமையாளராக மாட்டீர்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த சொத்தின் முழு உரிமையும் உங்களுக்குக் கிடைக்காது. பதிவு என்பது உரிமையை மாற்றுவதற்கான ஒரு ஆவணம் மட்டுமே. பத்திர பதிவை முடித்த பிறகு, அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால் அது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் நீங்கள் ஏதேனும் சொத்து வாங்கினால், பதிவு மட்டும் செய்துவிட்டு அப்படியே இருக்காதீர்கள். சரியான நேரத்தில் சொத்து மாற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்,
சொத்து மாற்றம் என்றால் என்ன? இந்திய பதிவுச்சட்டத்தை பொறுத்தவரை, சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்படி பதிவு செய்து அதற்கான பட்டாக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.. இந்த பட்டாவை நங்கள் வைத்திருந்தால் மட்டுமே அது உங்களுடைய முழுமையான சொத்தாக கருதப்படும்.
இந்த பட்டாக்கள் வருவாய்த் துறை சார்பில் தரப்படுகிறது.. இதற்கு முதலில், நீங்கள் சொத்துக்களை வாங்கும் பகுதியிலுள்ள விஏஓ என்று சொல்லப்படும் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு தந்து பெற வேண்டும். அந்த மனுவுடன், சொத்து மற்றும் உங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அடையாள ஆவணங்களின் நகல்களையும் இணைத்து வழங்கினால் அம்மனுவின் மீது விஏஓ அறிக்கை ஒன்றை தருவார். அந்த அறிக்கையுடன், தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட மண்டலத் துணை தாசில்தாரிடம் ஒப்படைப்பார்.
பிறகு அனைத்து ஆவணங்களையும் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, மனுதாரருக்குப் பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்குவார்கள். இந்த பணிகள் முடிந்ததுமே பட்டா மாற்றம் செய்ய வேண்டும். ஒரு சொத்தை பதிவு செய்யும் நபர், பத்திரப் பதிவு முடிந்ததுமே, வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது பத்திர பதிவை முடித்த பிறகு, அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால், அது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
Read more ; மாரடைப்பு வந்தா கண்களில் இதெல்லாம் தெரியுமாம்..!! இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..