செல்வப்பெருந்தகைக்கு லண்டனில் சொத்து?. கிளப்பிவிட்ட அண்ணாமலை!
Annamalai: காங் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, லண்டனில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாமியார் போலே பாபா இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் குழு அமைத்து அவரை பிடிப்பார்களா? காமராஜர் பிறந்த நாளை வருகிற 15ம் தேதி கன்னியாகுமரியில் கொண்டாட இருக்கிறோம். அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.
இது என்ன நாகரிகம்? என்னை சமூக விரோதி, ரவுடி என்றும் கூறி அவதூறாக பேசியுள்ளார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருகிறார். அதிகாரம் எல்லாம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக இவ்வாறு அவர் பேசுகிறாரா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சரண் அடைந்துள்ளார். அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்? என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும்.நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் நாகரிகம் கருதி இதை வேண்டாம் என்று கருதுகிறேன். என்னை அவதூறாக பேசியதற்காக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை பேசியதாவது, மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. நீதிமன்றம் சென்றால், அங்கே எங்கள் தரப்பு விசயங்களை முன்வைப்போம். அதற்குத் தயார் என்று பேசிய அண்ணாமலை, காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது எத்தனை வழக்குகள் உள்ளன? அவர் வாங்கி குவித்த சொத்துகள் என்ன என்பது பற்றிய பல உண்மைகளை இப்போது உடைத்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை, “இந்தப் பிரச்சினையை நான் ஆரம்பிக்கவில்லை. செல்வப்பெருந்தகை தான் இரண்டு நாட்கள் முன்னதாக பாஜகவில் ரவுடிகள் சேர்க்கப்படுகிறார்கள் என்று சொல்லி முதலில் சர்ச்சையைத் தொடங்கிவைத்தார்.
அவர் லண்டனில் முதலீடு செய்துள்ள பணத்தைப் பற்றிப் பேசுவோம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்ன வாங்கி வைத்துள்ளார்? அவரது மனைவி பெயரில் என்ன சொத்துகள் உள்ளன? ஆடிட்டர் ஏன் கொலை செய்யப்பட்டார்? அந்த வழக்கில் கைமாறிய பணம் எவ்வளவு?” என அடுக்கடுக்கான ரகசியங்களை வெளியிட்டுப் அண்ணாமலை பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Readmore: ஆஹா!. பேருந்தில் சில்லறை வாங்க மறந்துவிட்டீர்களா?. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!. புதிய வசதி!