அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல : உயர்நீதிமன்றம்
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரின் சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு அதே மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அவை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது என தெரிவித்தார்.
சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய நீதிபதி, சட்டப்படி மீண்டும் பரிசீலித்து இரண்டு மாதங்களில் முடித்து வைக்க உத்தரவிட்டார்.
Read more ; ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் WhatsApp வேலை செய்யாது..! முழு பட்டியல் இதோ..!