முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’பிரச்சாரத்தின்போது குழந்தைகளை பேரணி வாகனங்களில் ஏற்ற தடை’..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

02:07 PM Feb 05, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

2024 மக்களவைத் தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது.

அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம், பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றக் கூடாது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் விதிமீறல் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை இந்த நடவடிக்கை வலியுறுத்துகிறது.

Tags :
குழந்தைகள்தேர்தல் ஆணையம்பிரச்சாரம்மக்களவை தேர்தல்
Advertisement
Next Article