முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிரடி நடவடிக்கை...! மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி பணியிட மாற்றம்...!

Prohibition Enforcement Division Additional DGP Transfer.
06:49 AM Jun 21, 2024 IST | Vignesh
Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் எதிரொளியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 42 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் எதிரொலியாக கள்ளச்சாராய உற்பத்தி, விற்பனை மற்றும் போதைப் பொருட்களை தடுக்கும் - கண்காணிக்கும் பிரிவான குற்றம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கூடுதலாக கவனிப்பார்.

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் ஜி.கோபி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த எஸ். ஆர்.செந்தில்குமார் அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ்குமார் அகர்வால் மற்றும் செந்தில்குமார் இருவரும் டிஜிபி அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
dgpKallakuruchi issueMagesh kumar Agarwaltn government
Advertisement
Next Article