"ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்" கேப்டனை புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்..
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான். கேப்டன், புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லா மனிதர்களுடனும் அன்பாக பழகி, பல உதவிகளை செய்து வந்த நல்ல மனிதர். தனது எதார்த்தமான நடிப்பால், தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய இவர், உயிரோடு இருக்கும் போது பலர் இவரை பற்றி பேசாவிட்டாலும், அவரது மறைவிற்கு பிறகு தான் பலர் அவரது பெருமையை பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் சிவா, விஜயகாந்த் குறித்து பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அப்போது அவர் நடிகை மீனாவிற்கு நடந்த சம்பவம் ஒன்றை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது, ஒருமுறை, நடிகைகள் சிலர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல தயாராகியுள்ளனர். அப்போது ஓட்டல் வாசலில் 1000 பேர் கூடி நின்றனர். ஆனால் எந்த போலீஸ் பாதுகாப்பும் இல்லை. இதனால் ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில், பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் யாரும் வெளியே செல்ல முடியாமல் தவித்த போது, கேப்டன், நெப்போலியன், மற்றும் சரத்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தான் நடிகைகளின் பெரிய பெரிய பெட்டிகளை எடுத்து, பஸ்ஸில் ஏற்றியுள்ளனர். அப்போது கூட்ட நெரிசலை சாதகமாக பயன் படுதிக்கொண்ட நபர் ஒருவர், ஹெல்மட் அணிந்து வந்து மீனாவிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தில் எதுவுமே செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இத்தனை கவனித்த கேப்டன், ஆவேசமாக ஓடிவந்து, ஹெல்மட்டுடன் அந்த நபரை தூக்கி வீசினார். பின்னர் அவர் அந்த நபரின் ஹெல்மட்டை கழட்டி தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
கேப்டன் அடித்ததில், அந்த நபரின் தலையில் ரத்தம் வழிந்துள்ளது. இத்தனை பார்த்ததும், தள்ளுமுள்ளு செய்து கொண்டிருந்த அத்தனை பேரும் பயந்து தெறித்து ஓடிவிட்டார்கள். இதற்கு பிறகே நடிகைகளை அந்த வாகனத்தில் பத்திரமாக ஏற்றி அழைத்து வர முடிந்துள்ளது. கேப்டன் போல ஒருநபரை நான் பார்த்ததே கிடையாது என்று தயாரிப்பாளர் சிவா பிரம்மிப்புடன் கூறியுள்ளார்.
Read more: “நீ ஒரு அரை கிழவி” vj பார்வதியை கலாய்த்த தாய்.. பதிலுக்கு பாரு என்ன சொன்னார் தெரியுமா?